குட்டி கவிதைகள் ...
ஐம்பதுக்கும் மேற்பட்ட அம்பாசிடர் கார்கள்,
பத்துக்கும் மேற்பட்ட புகைபடகாரர்கள்,
இருபதுக்கும் மேற்பட்ட பூமாலைகள்,
வகை வகையான சோடா பாட்டில்கள்,
வெடித்து அடங்கியது போட்டோ பிலஷ்கள்,
வந்து இறங்கினார் அரசியல்வாதி,
ஒரு இழவு வீட்டிற்கு.
தாலாட்டு...
வாய் ஓயாமல் அழும் குழந்தைக்கு,
தாலாட்டு பாடினாள் ஏழை தாய்,
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை,
அதற்கு பசி காதை அடைத்துவிட்டது.
பணம்...
புத்தம்புது பைக் வாங்க, பணம் கேட்டான் மகன்,
வெறும் கோவணம் மட்டும் கட்டும் தந்தையிடம்.
வேலை...
உடம்பு முடியவில்லை என்றபோதும், அலுவலகத்திற்கு மெல்ல நடந்தார் தந்தை,கண்களில் நீர் கட்டியது, வேலை இல்லாத மூத்த மகனுக்கு.
காலில் விழுந்தால்...
தெரிந்தவர்களிடம் எல்லாம் காலில் விழுந்தால்,
அது இரு மனங்களின் சேர்தல் நிகழ்வு,
தெரியாதவர்களிடம் எல்லாம் காலில் விழுந்தால்,
அது ஓர் அரசியல்வாதியின் தேர்தல் நிகழ்வு.
மாலதி...
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், மாலதி என்று பெயரிட்டான் தன் பெண் குழந்தைக்கு,
இப்படித்தான் பலரும் ஞாயபகம் வைத்திருக்கிறார்கள், தங்களின் பழைய காதலியை.
மகன்...
அந்த தாயின் முகத்தில் அத்தனை பூரிப்பு,
பல நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கபோகும் சந்தோஷம்,
தன் மகன் செய்த ஆற்றலின் பெருமிதம் அவள் முகத்தில்,
மகனும் வந்தான்,
ஓர் பெட்டிக்குள், ராணுவ மரியாதையுடன்.
அமெரிக்கா...
தினமும் இதே இட்டிலியும் வடையும் தான் செய்ய தெரியுமா உனக்கு,
என்று அம்மாவை திட்டியது ஞாயபகம் வந்தது, சுரேஷுக்கு,
அமெரிக்காவில் காய்ந்த ரொட்டியை கடிக்க முடியாமல் கடிக்கையில்.
நேர்முக தேர்வு...
நேர்முக தேர்விற்கு ஏன் ஒருமணிநேரம் தாமதம் என்றார் நேர்முகவாளர்,
இந்த தேர்விற்கு டெபாசிட் கட்ட தான் என் கை கடிகாரத்தை அடகு வைத்தேன் என்று எப்படி சொல்வது ?
சோகம்...
அவன் அழுகையை அடக்க முயற்சித்து கொண்டிருந்தான்,
கண்களின் இமை, அணை அல்லவே, ஆகையால் வெடித்து பொங்கியது அழுகை,
மனைவியின் கரம்பற்றி அவள் மடியில் அழுது தீர்த்தான்,
ஆம், இந்தியா, பாக்கிஸ்தானிடம் தொற்றுவிட்டதாம் கிரிக்கெட்டில்.
என் காதல் சரி தான்
ReplyDeleteஎன் காதலை அவளிடம்
சொன்னதால் பெருமைப் படுகிறேன்
காதலை மறக்கும் பெண்ணிடம் அல்ல
காதலை மறைக்கும் பெண்ணிடம்