பொறம்போக்கு ப்ரீமியர் லீக்

இப்போ ரொம்ப famous ஆ இருக்கற ஒரு விஷயம் 20-20 கிரிகெட், ஆ ஊ நா, மட்டய தூக்கிகிட்டு கிளம்பிடறாங்க. பித்துகுளிக்கு திடீர்னு ஒரு யோசனை தோணிச்சு, ஏன் இந்த 20-20 கிரிகெட் மேட்டர நம்ப நல்ல விஷயத்துக்கு பயன் படுத்த கூடாது னு.

அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டி கோடி கோடி யா செலவு பண்ணி தேர்தல் னு ஒண்ண நடத்துறாங்க, அதுல அரசாங்கத்துக்கு எவளோ நஷ்டம், எவ்ளோ வன்முறை, இந்த தேர்தல் நடத்தரத்துக்கு பதிலா ஒரு 20-20 கிரிகெட் மேட்ச் வெச்சு நம்ப முதல் அமைச்சர தேர்வு பண்ணினா எப்படி இருக்கும் னு ஒரு சின்ன (பெரிய) கற்பனை.

இந்த 20-20 தேர்தல் டோர்னமென்ட் கு பேரு "பொறம்போக்கு ப்ரீமியர் லீக்", இதுல நம்ப தமிழ்நாட்டுல உள்ள அனைத்து அரசியல் கட்சியும் கலந்துக்குது. வழக்கம் போல ஒரு ஒரு கட்சியும் அவங்களோட டீம்க்கு பேரு வெக்கறாங்க, அதுக்கு எல்லா கட்சியும் ஒரு அவசர மீட்டிங் ஒன்னு போடுது...

ஜெயலலிதா டீம் மீட்டிங் மினிட்ஸ், இதோ இங்க.

ஒ பன்னீர்: அம்மா, நம்ப கட்சி பெற கேட்ட உடனே, அத்தனை பயலும் ஒன்னுக்கு இருக்கனும், அப்படி ஒரு சூப்பர் பேரா இருக்கணுமா அது.

சசி: ஹ்ம்ம், அப்படினா "பாத்ரூம்" னு தான் வெக்கணும் ?

ஒ பன்னீர்: ஐயோ, அப்படி சொல்லல மா, எதிரணிக்கு கிலி உண்டாகணும் னு சொல்ல வந்தேன்

ஜெ: இந்த மாதிரி பைத்தியகாரத்தனமா யோசிக்கரதுனால தான் உன்ன full-time CM ஆக்கல நான், ஸ்டுபிட். இந்த மாதிரி மட்டேருக்கு சரியான ஆள் நம்ப வை.கோ தான், எங்க அவரு ?

இப்படி ஜெயலலிதா கேட்கும் பொது கரெக்டா என்ட்ரி குடுக்கறாரு வை.கோ.

வை.கோ: இப்படி தான் கலிங்கத்து போரிலே, கர்ணன் தான் ஏறி வந்த குதிரையின் பெயரை "அஸ்வதாமன்" என்று வைத்த பொழுது ...

ஜெ: ஸ்டாப் இட் வை.கோ, ஆ ஊ நா, சோழ நாட்டிலே, கலிங்கத்து போரிலே, பிசராந்தயார் கூறுகையில் னு, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஒளரிகிட்டு, இப்போ நம்ப டீம் கு ஒரு நல்ல பேரா யோசிச்சு சொல்லுங்க.

வை.கோ: அம்மா, இப்படி ஒரு நாள் வரும் என்று நான் எப்பொழுதோ கணித்து விட்டேன். கடந்த இரு வாரங்களாக நான் பல புராண இதிகாசங்களை அலசி ஆராய்ந்து, ஒரு முத்தான பெயரை நம் அணிக்கு தேர்ந்தெடுத்து உள்ளேன்.
ஒ பன்னீர்: (மனசுக்குள்), "இப்பவே கண்ண கட்டுதே"

சசி: புராண பெயரா, மிஸ்டர் வை.கோ, நம்ப விளையாட போறது "கிரிகெட்", நீங்க அதுக்கு தகுந்தா மாதிரி பேரு வெக்கணும்.

வை.கோ: அதை நானும் அறிவேன் என் அன்பு தங்கையே, அந்த சித்தம் கூடவா உன் அண்ணனுக்கு கிடையாது என்று எண்ணிவிட்டாய் ? இதோ கேளுங்கள் இந்த வரலாற்று சிறப்பு பொருந்திய பெயரை.

ஒ பன்னீர்: (மனசுக்குள்), இந்த ஆள் பேரு சொல்லரத்துகுள்ள அடுத்த தேர்தலே வந்துடும்.

வை.கோ: "கொண்கினி ரௌத்ற குஞ்சுகள்"

அவர் பேர் சொல்லி முடிச்ச உடனே சுத்தி இருந்தவங்க எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுடாங்க, ஒ பன்னீர் தரையில விழுந்து பொரண்டு சிரிக்கறாரு, ஜெ, சசி ரெண்டு பேரும், வயத்த புடிச்சுகிட்டு "போரும் வை.கோ போரும், இதுக்கு மேலயும் காமெடி பண்ணாதீங்க" னு விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. வை.கோ மூஞ்சி சின்னதா போய்டுச்சு.

ஒ பன்னீர்: யோவ் வெத்துவேட்டு, அவன் அவன் "டார் டெவில்ஸ்", "சூப்பர் கிங்க்ஸ்", "சார்ஜெர்ஸ்" னு எல்லாம் பேர வெக்கறான், நீ என்னடா நா, "குஞ்சுகள்", "பிஞ்சுகள்" னு பேரு வெக்கரியே. எதாவது யூத் fulaa யோசியா.

வை.கோ:இதை தாங்கள் முன்கூட்டியே அறிவித்து இருந்தால், காளையர்களும், கன்னியர்களும் சொக்கி போகும்படி ஒரு பெயரை தேர்வு செய்திருபேனே. இப்பொழுதும் ஒன்றும் கெடவில்லை, "சுந்தர காண்டத்தில்" இராமபிரான் தான் கண்ட சீதையின் அழகை வர்ணிக்கையில் கூறுவர்... "கோகில கூந்தலோ, கரு நிற மேகமோ, மீன்களின் பார்வையோ ..."

வை.கோ இப்படி பேசும் போது, எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு குண்டர் படை, வை.கோ வை அலாக்காக தூக்கி சென்று போயஸ் தோட்டத்துக்கு வெளிய விட்டு விடுகிறது.

ஒ பன்னீர்: அம்மா, இந்த ஆள் வேலைக்கு ஆகமாட்டார், நம்ப ஏன் வைரமுத்து தம்பிய யோசிக்க சொல்ல கூடாது ?

ஜெ: fantastic!!, இப்போ தான் பன்னீர் நீ உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க.
என்று ஜெ கூறும் பொது, வை.கோ வை தூக்கி சென்ற குண்டர் கூட்டம், ஒரு பெரிய சாக்கு மூட்டையுடன் உள்ளே நுழைகிறது. சாக்கு மூட்டையை பிரித்தால், உள்ளே "குத்தவெச்ச" போஸில் "கவிப்பேரரசு" வைரமுத்து, ஒரு பேப்பர் பேனாவுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்.

ஒ பன்னீர்: யோவ், கவி, உன் முன்னாடி யாரு னு கொஞ்சம் பாருயா.

வை.மு: அஹ, அன்னையே, இந்த ஏழையின் வீட்டில் உங்கள் பொற்பாதம் பட நான் என்ன பாக்கியம் செய்தேன் ?
ஒ பன்னீர்: லூசு, நீ இருக்கறது இப்போ அம்மா வீட்டுல, உங்க வீட்டுல இல்ல.

முதலில் சற்றே ஜெர்க் ஆனா கவி, பின்பு சுதாரித்து கொண்டு, இருக்கட்டுமே, என் வீடு அம்மா வீடு, அம்மா வீடு, என் வீடு என்று கூறி, தான் மிகப்பெரிய தமாஷ் செய்ததாக எண்ணி ஓவென்று சிரித்தார், ஆனால் சுற்றி இருந்த அனைவரின் முகத்திலும் அப்படிஒரு இருக்கம். மீண்டும் சுதாரித்து கொண்டு, தான் வந்த காரணத்தை வினவினார்.

ஒ பன்னீர், வைரமுத்து அழைத்து வரபட்டதன் நோக்கத்தை கூறினார்.

வை.மு: கவிஞர்களுக்கு சவால் விடுவதில் அன்னைக்கு நிகர் அன்னையே தான்

ஒ பன்னீர்: (மனசுக்குள்), opening எல்லாம் நல்ல தான் இருக்கு, finishing தான் எப்படி னு பார்க்கணும்.
வை.மு நீண்ட நேர யோசனைக்கு பின்

வை.மு: அல்லி அல்லி அனார்கலி, வந்துவிட்டது அம்மா புலி, opponents எல்லாருக்கும் total கிலி, ஓடி ஒளிந்தது கிழட்டு எலி. ஆஹா, கவிதை, கவிதை

ஜெ: மிஸ்டர் வை.மு, உங்கள பேரு வெக்க சொன்னா பாட்டு எழுதரீங்கள? , டீமுக்கு நல்ல பேரா சொல்லுங்க இல்லாட்டி உங்க மேல வருமான வரி கேஸ் போட வேண்டிவரும்.

ஒ பன்னீர்: (மனசுக்குள்), காக்கா மண்டையன் செத்தாண்டி இன்னிக்கு.

வை.மு: கவிதை படிக்க தெரிந்த இந்த கருப்பு சிங்கத்துக்கு பெயரா வைக்க தெரியாது? உங்களுக்கு எந்த வகையான பெயர் வேண்டும் ? தமிழிலா ? ஆங்கிலத்திலா ? தங்க்ளிஷிலா ?

ஒ பன்னீர்: அம்மா, நா வேணும்னா வருமான வரி அதிகாரிக்கு போன் போட்டுரட்டுமா?
வை.மு: ஐயோ, கொஞ்சம் வெயிட் பண்ணு பன்னீரு, இதோ ரெண்டு நிமிஷத்துல சொல்லிடறேன்.
சற்றே பதற்றத்துடன் யோசித்த வை.மு, உடனே குஷியாகி

வை.மு: அம்மா, இதோ உங்கள் அணிக்கு பெயர் கண்டு பிடித்துவிட்டேன், இந்த தேர்தலில் நீங்கள் ஆட்சியை பிடிக்க போவது உறுதி, ஆகவே நம் அணியை "MUMMY RETURNS" என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்.

ஜெ: சிம்ப்லி சுபெர்ப், இதுக்கு தான் உங்கள மாதிரி அறிவாளிங்க வேணும் னு நா சொல்லறது. ஐ லைக் திஸ்.

ஒ பன்னீர்: (மனசுக்குள்), இதுக்கு பேர் தான் "just la miss" ஒ ?
ஒ பன்னீர்: (சத்தமாக) கலக்கிடீங்க கவிஞரே, பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல.

அதே குண்டர் கூட்டம், மறுபடியும் வை.மு வை அதே மூட்டைக்குள் அடைத்து, அலாக்காக தூக்கி செல்கிறது. உயிர் பிழைத்த சந்தோஷத்தில் மூட்டைக்குள் சமத்தாக மீண்டும் "குத்தவைகிறார்" வைரமுத்து



அம்மா டீமுக்கு பேர் வெச்ச விஷயம் காட்டு தீயா பரவி, கோபாலபுரம் ஏரியா டீப் டிஸ்கஷனில் குதிக்கிறது.

த.மாறன்: தாத்தா, நடந்தது நடந்து போச்சு, பழச எல்லாம் நான் மறந்துட்டேன், இந்த வாட்டி உங்களோட தோள் சேர்ந்து, நம்ப கட்சிக்காக, சாரி, சாரி, நம்ப டீமுக்காக உழைக்க போறேன். டீமுக்கு பேரு வேக்கவேண்டிய பொறுப்பு என்னோடது, நீங்க ஒண்ணும் கவலை படாதீங்க. டேய், தாத்தாக்கு BP tablets குடுத்தாச்சா ?

ஸ்டாலின்: (மனசுக்குள்), சும்மா சொல்ல கூடாது, பய புள்ள, நல்லாவே மாவரைக்கறான்.

மு.க: அது தெரியுமடா என் அன்பு செல்வமே, நீ வருவாய் என நான் அறிவேன்.

த.மா: எப்படி தாத்தா நா வருவேன் னு கண்டுபுடிசீங்க ?

ஸ்டாலின்: யாராச்சும் கேமரா வா தூக்கிட்டு வந்தா போதுமே, நீ பினாடியே வந்துடுவியே. அது வொர்க் ஆகற கேமரா வா, வொர்க் ஆகாத கேமரா வா, ஒண்ணும் பார்க்கறது இல்ல, பல்ல காட்டிகிட்டு ஈ னு இளிக்கறது.

அழகிரி: இது கூட மன்னிச்சு விட்டுடலாம் தம்பி, போன வாரம், TV ல யாரோ கேமரா புடிச்சுக்கிட்டு நிக்கறா மாதிரி ஒரு சீன் வந்துருக்கு, இது உடனே லூசு மாதிரி, தன் வீட்டு TV முன்னாடி நின்னுக்கிட்டு, ஈ னு இளிச்சுக்கிட்டே போஸ் குடுத்துருக்கு, இத என்னத்த சொல்ல.

த.மா: தாத்தா, நீங்க இருக்கீங்களே னு அமைதியா இருக்கேன், இல்லாட்டி ...
ஸ்டாலின்: இல்லாட்டி என்னடா ? என்ன பண்ணுவ ?
த.மா: ஒ னு அழுதுருவேன்.
மு.க: சண்டை இடாதீர்களடா என் கண்மணிகளா, நாம் சிந்தித்து செயல் படவேண்டிய காலமடா இது. நமது அணிக்கு நல்லதொரு பெயரை சூட்டுங்களடா என் செல்வங்களே.

த.மா: நா ஏற்கனவே நல்ல ஒரு பேரோட தான் தாத்தா வந்துருக்கேன்.
அழகிரி: ஹ்ம்ம், நீ மொதல்ல பேர சொல்லு, நாங்க அது நல்ல பேரா, நொள்ள பேரா னு முடிவு பண்ணிக்கறோம்.

த.மா: இப்போ computers தான் தாத்தா எல்லாமே

ஸ்டாலின்: (மனசுக்குள்), தோடா கண்டுபுடிச்சுடார் பா கொலம்பஸ்ஸு

த.மா: அதுனால, நம்ப டீமோட பேரு ஹாய்-டெக் ஆ இருக்கனும், ஸோ அப்படியே என் கம்ப்யூட்டர் brain ந use பண்ணி, ஒரு சூப்பர் பேரு வெச்சுருக்கேன்.

ஸ்டாலின்: ஐயா பில் கேட்ஸ், எங்க உங்க சூப்பர் ஹாய்-டெக் பேர கொஞ்சம் எங்க காதுக்கு download பண்ணுங்க பார்போம்.

ஸ்டாலின் சொல்லி முடிச்ச உடனே, அழகிரியும், ஸ்டாலினும் ஒருத்தர்க்கு ஒருத்தர் கைய தட்டி சிரிச்சுக்கறாங்க.
த.மா: நம்பளோட கட்சி ரொம்ப பழமை வாய்ந்த கட்சி, அதே சமயம் புதுமைகள் செய்ய தயங்காத புரட்சி கட்சி, அதுனால நம்ப டீமோட பேரு பழமை வாய்ந்ததாவும் இருக்கனும் அதே சமயம் புதுமையாவும் இருக்கனும். இப்படி புதுமையும் பழமையும் கலந்த ஒரு காவியம் தானே என் தாத்தா, அப்பேற்பட்ட ஒரு மாமனிதனோட டீமுக்கு நா பேர் சூட்டறேன் னு நெனைச்சாலே என் உடம்பெல்லாம் சிலிர்த்து போவுது. நான் சின்ன வயசுலேர்ந்து யோசிச்சுருகேன், அது எப்படி இவரால மட்டும் எப்பவுமே சுருசுருப்பாவும், துடிதுடிப்பாவும் இருக்க முடியுது னு, ஆனா அதுக்கு இன்னி வரைக்கும் பதில் கிடைக்கல ...

ஸ்டாலின் அழகிரியின் காதில் ஏதோ சொல்ல, உடனே அழகிரி தன் அடியாளிடம் ஏதோ சொல்ல, எங்கிருந்தோ போட்டோ பிலாஷ்களும், போகஸ் விளக்குகளும், காமேரக்களும் வரவழைக்கப்பட்டன. அதை பார்த்த உடனே பரபரப்பான தயாநிதி மாறன், சட்டை, டை, ஆகியவற்றை சரி செய்து.

த.மா: நமது அணியின் பெயர் - "DRAVIDIAN ROCKETS"

அட நார பயலே, இந்த எழவுக்கு தானா இப்படி மொக்க போட்ட, உங்க தாத்தா தூங்கியே போயட்டாருடா என்று ஸ்டாலினும் அழகிரியும் மாறனை பார்த்து பல் கடித்தனர். திடீர் என்று போட்டோ பிலஷ்களின் சத்தம் கேட்டு முழித்த கருணாநிதி, தயாநிதி மாறனை பார்த்து கைகூப்பி, கண்ணீர் மருக, தயவு செய்து வெளியே போகுமாறு செய்கை காட்டினார்.

மு.க: என் அன்பு செல்வங்களே, இனி இந்த மாறனின் புத்திரன் என் கண் முன் படாமல் பார்த்துக்கொள்ளுங்களடா, அவனை இனியும் நம்பினால் நாம் தான் முட்டாள் ஆகி விடுவோம். நமது அணிக்கு பெயர் சூட்ட, என் உடன் பிறவா சகோதரன், நான் ஈன்றேடுக்காத அன்பு மகன், பா.விஜய் யை அழைத்திருக்கிறேன், அவன் இப்பொழுது வந்துவிடுவான்.
மு.க சொல்லி முடிப்பதற்குள், மூச்சிரைக்க ஓடி வருகிறார் பா. விஜய்
மு.க: வந்துவிட்டாயடா என் கவிதை சுரங்கமே, இது என்னடா கோவணத்துடன் ஒரு கோலம் ?

ப.வி: இல்ல பா, நீங்க போன் பன்னிருந்த பொது நா குளிக்க போயிருந்தேன், உங்க போன் னு தெரிஞ்ச உடனே அப்படியே ஓடி வந்துட்டேன்.
ஸ்டாலின்: (மனசுக்குள்) ஆளாளுக்கு டைப் டைப் ஆ மாவாட்டரானுன்களே. நல்ல வேளை, கோவணத்த அவுக்கரதுக்கு முன்னாடி போன் பண்ணினாரு, இல்லாட்டி நிலைமை இன்னும் மோசமா போயிருக்கும்.

மு.க: நான் உனக்கு தொலைபேசியில் கூறியது போல், என் கிரிகெட் அணிக்கு ஓர் நல்ல கவித்துவம் வாய்ந்த பெயரை நீதானடா சூட்ட வேண்டும்.

ப.வி: அப்பா, இப்போ நா ஓடி வரச்சே எனக்கு ஒரு கவிதை தோணிச்சு பா, அத சொல்லவா ?

அழகிரி: (மனசுக்குள்) ஓடி வரச்சே கவிதை தோணின நாய்க்கு ஒரு ஜெட்டி போடணும் னு தோணிச்சா பாரேன்.

மு.க: அதை கேட்பதை விட வேறு இன்பம் எதாவது இருக்க முடியுமா என் செல்வமே, காதில் தேன் ஊற்ற உத்தரவு வேண்டாமடா என் கண்மணி.

ப:வி: ஒவ்வொரு தேர்தலுமே வேன்றிடுமே, கலைஞரின் வெற்றிக்கொடி பரந்திடுமே, 20-20 என்பது வேண்டும் நம் நாட்டில், இனி வறட்சி தான் எப்பொழுதும் அம்மா காட்டில்.

என்று "ஆட்டோகிராப்" டியூனில் மெய் மறந்து கோவணத்துடன் பாடும் விஜய்யை, ஏற்கனவே தயாநிதி மாறன் ஏற்படுத்திய கடுப்பில் இருந்த அழகிரி, கருணாநிதி சற்றே அசந்த நேரம் பார்த்து, தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு விட்டு, நாக்கை மடித்து, ஒரு விரலை மட்டும் காட்டி ஏதோ மிரட்டினார்.

ஸ்டாலின்: டேய், இது நீ ஏற்கனவே சேரனுக்காக "ஆடோக்ரப்" படத்துல்ல போட்ட பாட்டு மாதிரியே, இருக்கே? அப்பாக்கு வயசாய்ருச்சு னு, அவர ஏமாத்த பார்கரியா ?

மு.க: நானும் அதையே தான் நினைத்தேன், அதற்கு முன் நீ சொல்லிவிடாய் என் செல்வமே.
சற்றே கொட்டு வாங்கிய gare இல் இருந்த ப.விஜய், நிலைமை மோசமாவதை அறிந்து, சுதாரித்து கொண்டார்.

ப.வி: அட, அப்படி எல்லாம் இல்ல ஸ்டாலின், ஹிட் ஆனா சாங் வெச்சு ரீமிக்ஸ் பண்ணினா ரீச் நல்லா இருக்குமே னு பார்த்தேன், வேற ஒண்ணும் இல்ல.

அழகிரி: ரீச் எல்லாம் நாங்க பார்த்துக்கறோம், நீங்க ஒரு நல்ல பேர மட்டும் சொன்னா போரும். நிக்கறத பாரு, பழனி முருகன் மாதிரி, கோவணத்தோட. இனியும் எதாவது கவிதை அது இது னு சொன்ன, மகனே கோவணம் கூட ஒடம்புல இருக்காது.

மு.க: கொந்தளிக்க வேண்டாமடா என் தவ புதல்வா, பெயர் கூறாமல் இந்த இடத்தைவிட்டு போக முடியாது என்று என் செல்வத்துக்கு தெரியாதா என்ன ?

அந்த குளுரும் அறையில், ப.விஜய்க்கு மட்டும் ஏனோ வேர்த்து கொட்டியது. இனியும் கோவணத்துடன் நிற்க முடியாது என்று அறிந்து, ஒரு வெட்டி வாங்கி கட்டிக்கொண்டார் கவிஞர்.

ஏதேனும் தப்பிக்க வழி உள்ளதா என்று பார்ப்பதை போல, அறையினுள் இங்கும் அங்கும் அலைந்த படி இருந்தார் கவிஞர், சற்று நேர அலைச்சலுக்கு பின், துள்ளி எழுந்த புள்ளி மானாக மாறி, கருணாநிதியின் காதருகே வந்து நின்றார் ப.விஜய்
ப.வி: அப்பா, இதை விடவும் ஒரு நல்ல பெயர் உங்கள் அணிக்கு பொருந்த இயலாது என்றே எனக்கு தோன்றுகிறது.

மு.க: அதை கேட்க தானே செல்வமே, சிறுநீர் கூட கழிக்காமல் இவ்வளவு நேரம் காத்திருக்கிறேன்.

ப.வி: எதிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தன்னம்பிக்கையுடன் வாழும் தாங்கள் தலைமை ஏற்று நடத்த போகும் அணியின் பெயர் - "VICTORY VEERANS".

மு.க: ஆஹா, அருமை, அருமை. நான் என்ன எதிர் பார்த்தேனோ அதைவிட சிறப்பான பெயர் கொடுதுவிட்டாயடா என் கண்மணி. நீ அடுத்த முறை ஏதேனும் புத்தகம் வெளியிட்டால், காசு வாங்காமல் உன்னை பற்றி சிறப்பாக பேசுவேனடா என் செல்வமே, காசு வாங்காமல் பேசுவேன்.

ஸ்டாலின்: அப்பா உங்களுக்கு புடிச்சுருக்கு நா எனக்கும் புடிச்சுருக்கு பா.

அழகிரி: (மனசுக்குள்), இப்படி சொம்படிச்சு சொம்படிசே அடுத்த சீ.எம் நீ தான் னு சொல்ல வேசுட்டியே, அப்புறம் ஏன் இன்னும் பம்மர ?

தன் உயிரும், மானமும் (கோவணம்) தப்பித்த சந்தோஷத்தில், வந்த வேகத்திலேயே ப.விஜய் தன் இல்லம் நோக்கி ஓடுகிறார்.

இதே மாதிரி பல போராட்டங்களுக்கு பிறகு, விஜயகாந்த் அவர் டீமுக்கு "BLACK MONSTERS" நும், ராமதாஸ் அவர் டீமுக்கு "BALD BATTERS" நும் பேரு வெச்சது தனி கதை.

பேரு வெச்சாச்சு, அப்புறம் என்ன ஆளாளுக்கு ஒரு டீம் ஒணர செலக்ட் பண்ணி BIDDING பண்ணறது தான். ஒவ்வொரு டீமும் அவங்க அவங்களுக்கு புடிச்ச players ஏ எப்படி செலக்ட் பண்ணறாங்க னு பார்போம். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்ன நா, சினிமா நடிகர்களும் இங்க players, ஸோ அவங்களையும் பிட் பண்ணலாம்.
"MUMMY RETURNS"

அவங்க டீம் ஓனர் வேற யாரு "வை.கோ" தான். முழு பொறுப்பையும் தான் தான் எடுத்து நடத்துவேன் னு (அழுது) அடம் புடிச்சு வாங்கினாரு, players செலக்ஷன் லேர்ந்து, sponsor புடிக்கரவரைகும் எல்லா வேலையும் அவர் தான் பார்த்துக்கணும். ஆனா இந்த "Cheer Leaders" புடிக்கற வேலைய மட்டும், சசிகலா தம்பி மஹாதேவன் எடுத்துட்டாரு, அதுல ஒ பன்னீருக்கு தனி கடுப்பு.

ஜெ: ஹே பன்னீர், டோர்னமென்ட் கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு, டீம் செலக்ஷன் ஆரம்பிக்கணும், எங்கயா போனாரு நம்ப டீம் ஓனர் ?

ஒ.பன்னீர்: ஐயோ, அத ஏன் மா கேட்கறீங்க, சேபாக்கத்துல மேட்ச் வெச்சா, கண்ணகி சிலை மேல பால் பட்டு ஒடைஞ்சு போற ஆபத்து இருக்கு னு எவனோ எடுபட்ட பய சொல்லிட்டான், அவ்வளோதான், அத கேட்டதுலேர்ந்து ஒரே அப்செட், எங்க தன்னால தமிழ் கு களங்கம் வந்துடுமோ னு பயபடறாராம்.

ஜெ: non-sense கூப்புடுயா அந்த குடுகுடுப்பகாறன

ஐயகோ, பாரதம் போற்றும் கர்ப்புக்கரசிக்கு என்னால் ஆபத்தா, மனம் போருக்கவில்லையே. இதை தான் கம்பன் அழகாக கூறினான் - "கடன் பட்ட நெஞ்சம் போல் கலக்ங்கினான் இலங்கை வேந்தன்" என்று ஒரு ஓரமாக புலம்பிக்கிட்டு இருந்த வை.கோ ரூமுக்கு ஜெ நுழைஞ்ச உடனே

வை.கோ: அம்மா, கேடீங்களா, நம்பளால கண்ணகிக்கு ஆபத்துமா ஆபத்து, ஒரு பெண்ணோட சோகம் இன்னொரு பெண்ணுக்கு தான் தெரியும் னு சொல்லுவாங்களே, உங்களுக்கு தெரியுதாமா அந்த கருப்பு சிலை வடிக்கற கண்ணீர் ?

ஜெ: ஹலோ, கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியா ?

என்று ஜெ பேசும் போதே தாவி வந்து அலைபேசியை கட் செய்கிறார் வை.கோ

ஜெ: இன்னொரு வாட்டி இப்படி லூசு மாதிரி எதாவது பேசினீங்க, உங்கள நெஜமாவே பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அன்னுபிடுவேன்.

ஒ பன்னீர்: நல்லா காதுல விழரா மாதிரி சொல்லுங்க மா, லூசு, லூசு

"VICTORY VEERANS"

இந்த டீமோட ஓனர், வேற யாரு, நம்ப தயாநிதி மாறன் தான். எப்படியோ கெஞ்சி கூத்தாடி, தாத்தா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டாரு இவரு. இவரும் players செலக்ஷன் லேர்ந்து, sponsor புடிக்கரவரைகும் எல்லா வேலையும் அவர் தான் பார்த்துக்கணும். "Cheer Leaders" புடிக்கற வேலையும் இவருது தான், ஸோ மனுஷன் கொஞ்சம் குஷியா இருக்காரு.

பட்ட பகல் ல பகிரங்கமா சூதாடறாங்க னு விஜயகாந்தும், ராமதாசும், bidding க்கு வராம, கோர்ட்ல மனு குடுக்க போய்டாங்க.

நல்லதொரு திருநாளில் "MUMMY RETURNS" & "VICTORY VEERANS" bidding பண்ண போறாங்க, இதோ எப்படி பண்ணறாங்க னு நீங்களே பாருங்களேன்.
கட்சிகாரங்கங்கற முறைல, "MUMMY RETURNS" டீமுக்கு, ஒ பன்னீர்(opening batsmen), அன்பழகன் (one down), தொல் திருமாவளவன், சைதை மணி, மற்றும் சிலர். இன்னும் அஞ்சே அஞ்சு பேர மட்டும் செலக்ட் பண்ணினா போதும், வழக்கம் போல, அம்மா சொல் பேச்சு கேட்காத பிள்ளையா வை.கோ.

அதே மாதிரி "VICTORY VEERANS" டீம்ல, ஸ்டாலின் (opening batsmen), அழகிரி (one down), ப.விஜய், டி.ராஜேந்தர், மற்றும் சிலர். அவங்களும் இன்னும் அஞ்சே அஞ்சு பேர மட்டும் செலக்ட் பண்ணினா போதும், வழக்கம் போல, தாத்தா சொல் பேச்சு கேட்காத பேரனா தயாநிதி மாறன்.

மொதல் ஆளா வை.கோ செலக்ட் பண்ணினது, நம்ப சிம்பு வ, Rs. 500/- ல ஆரம்பிச்சுது ஏலம், கடைசில Rs 25/- க்கு "MUMMY RETURNS" க்கு சாதகமா முடிஞ்சுது, ஏதோ தேர்தலே ஜெயிச்சா மாதிரி வை.கோ மூஞ்சில (மட்டும்) அவ்வளோ சந்தோஷம்.

ரெண்டாவதா ஏலத்துக்கு வந்தது "S J Surya", ஜெ வழக்கம் போல ஒ பன்னீர் கிட்ட ஒபினியன் கேட்டாங்க.

ஒ பன்னீர்: இந்தாள எடுக்கலாம் தப்பு இல்ல, ஆனா பஞ்சையும் நெருப்பையும் பக்கத்து பக்கத்துல வெக்கனுமா னு யோசிக்கறேன்

ஜெ: என்ன ஒளறீங்க பன்னீர் ? என்ன பஞ்சு, என்ன நெருப்பு ?

ஒ பன்னீர்: அட இல்லம்மா, "Cheer Leaders" போன்னுங்கேலாம் கொஞ்சம் சிக்கு னு பார்க்க அம்சமா இருக்கும், இந்த ஆள் பாட்டுக்கு, பந்த புடிக்கறேன், அது இது னு எதாவது சிலிமிஷம் பண்ணிடுவாரோ னு பயமா இருக்கு அதான்.

இவங்க ரெண்டு பேரும் பேசி முடிக்கறதுக்குள்ள நம்ப வை.கோ S J Surya வ வாங்கிட்டாரு, அதுவும் free யா, அதுல வை.கோ கு அவ்வளோ சந்தோஷம். வழக்கம் போல ஜெ ஓட அனல் பார்வை தாங்க முடியாம, அப்படியே டேபிள் அடியில குனிஞ்சுட்டாறு.

அடுத்து ஏலத்துக்கு வந்தது "தனுஷ்", பார்க்க ஒல்லியா குச்சி மாதிரி இருந்தாலும், பய செம ஸ்ட்ராங், இவன நம்ப டீம் ல எடுத்தே ஆகணும், ஸோ எவளோ செலவானாலும் பரவாஇல்ல, இவன நம்ப வாங்கியே ஆகனும்மா னு ஒ பன்னீர் ஓகே பண்ண, தனுஷை Rs 15/- குடுத்து வாங்கிடாங்க "MUMMY RETURNS" டீம்.

இதுவரைக்கும் எந்த ஒரு எலத்தையும் வாங்காம அமைதியா சிரிச்சுகிட்டு இருக்காரு நம்ப தயாநிதி மாறன், ஸ்டாலினும் அழகிரியும், கொலைவெறியோட மாறான பார்கறாங்க.

மு.க: கண்ணே மாறா, ஏனடா எந்த ஒரு வீரனையும் வாங்காமல், அமைதி காக்கிறாய் ? பழிவாங்க இது நேரமில்லையட என் செல்வமே

மு.மா. நீங்க அமைதியா இருங்க தாத்தா, யுத்தஓட பிரைன் உங்களுக்கு புரியாது, just wait and watch my கேம். உங்களுக்கு காசும் மிச்சமாகும், அதே சமயம் வேண்டிய அளவுக்கு ஆளுங்களையும் செலக்ட் பண்ணி தரேன்.

அழகிரியும் ஸ்டாலினும் கையால் அரிவாள் ஆக்ஷன் காட்டுகிறார்கள்.

அடுத்து ஏலத்துக்கு வந்த ஆசாமி "ஜெயம் ரவி", இந்த பையன் பெருலையே "ஜெயம்" இருக்கறதுனால, இவன வாங்கிடலாம் னு செண்டிமெண்ட் பீலிங் விட்ட வை.கோ, ஒரே நிமிடத்தில் ஜெ க்கு பிடித்தவராகி போனார். அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்ட பார்வையில் ஒரு மினி "பாச மலர்" படமே ஓடியது. அவரையும் Rs 20/- குடுத்து மடக்கி போட்டனர் "MUMMY RETURNS" அணியினர்.

அடுத்து வந்தது இரண்டு திமிங்கிலங்கள், ஒரு "ரஜினிகாந்த்" மற்றொன்று "கமல்ஹாசன்", இவர்கள் இருவரும் "icon" வீரர்கள், ஆகவே இவர்களை வாங்க இயலாது, ஆனால் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இரு டீம்களும் ஒரு மின்சார மணியை வைத்திருக்கும், எந்த அணியினர் முதலில் மணியை அழுத்துகிரார்களோ, அவர்களது அணியில் அந்த icon வீரர் சேருவார்.
முதலில் அழைக்கப்பட்டது "ரஜினிகாந்த்" பெயரை, வை.கோ தனது இஷ்ட தெய்வங்களை எல்லாம் வணங்கி, தனக்கே ரஜினிகாந்த் கிடைக்க வேண்டும் என்று மணியை அழுத்தினார், அவர் வேண்டுதலுக்கு ஏற்பவே, ரஜினிகாந்தை அடைந்தது "MUMMY RETURNS" டீம்.

இதுல என்ன காமெடி நா, தம்பி தயாநிதி மாறன், மிசார மணியை அழுத்தவே முயற்சிக்கவில்லை. மு.க, இது அறிந்து மிகவும் கடுப்பானார், த.மா, நிச்சயமாக ஏதோ சதி தீட்டுவதாக அறிந்தார். அழகிரி தன் அடியாட்களை ஆடிடோரியத்தின் வெளியே தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார், அவரின் அகோர பார்வைக்கு, தயாநிதி மாறன் வீசியதோ ஒரு மௌன புன்னகை.

அடுத்து அழைக்கப்பட்டது "கமல்ஹாசன்" பெயரை, நடுவர் 1 2 3 என்று கூறி முடித்தவுடன், பாய்ந்து மணியை அழுதினார் தயாநிதி மாறன், தனது அணிக்கு முதல் வீரனாக உலக நாயகனை எடுத்ததில், மு.க முகத்தில் அத்தனை பெருமிதம், அழகிரியும் ஸ்டாலினும் த.மாறனை பார்த்து லேசாக புன்னகைத்தனர்.

அடுத்த ஏலம் அழைக்கும் முன், இடத்தை காலி செய்தார் தயாநிதி மாறன், இன்னும் தனது டீமுக்கு வீரர்களை சேர்க்கவேண்டுமே என்று குழம்பிய கருணாநிதி

மு.க: என் அன்பு தங்கமே, அனைவரும் பத்து வீரர்களுடன் களம் இறங்கும் போது, நாம் மட்டும் குறைந்த வீரர்களுடன் களம் இறங்க முடியாதடா என் செல்வமே ? மேலும் வீரர்களை தேர்வு செயும்முன் ஏனடா எழுந்து விட்டாய் ?

த.மா: என்ன தாத்தா புரியாம பேசறீங்க, நம்ப எடுத்து கமல் ல, அவரு "தசாவதாரத்துல்ல" பத்து வேஷம் போட்டவரு, மிச்ச வீரர்களுக்கு இவரையே வேற வேற வேஷம் போட்டு ஆட விட்டுடுவோம், நமக்கு செலவும் மிச்சம், ஆளுங்களும் பத்து பேர் இருப்பாங்க, அதுக்கு தான் நா ஐடியா பண்ணினேன்.

பின்னர் சற்றும் எதிர் பாராத விதமாக மின்சாரம் சிறிது நேரம் தடை பட்டது, அந்த இடமே இருட்டாகி போனது, சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் ஒளி வந்தது, முகமெல்லாம் வீங்கிய நிலையில், ஆங்காங்கே ரத்த காயங்களுடன், மீதம் உள்ள நான்கு வீரர்களையும் த.மா தேர்வு செய்தது தனி கதை.

bidding க்கு வராமல் போனதால் "BLACK MONSTERS" அணியும், "BALD BATTERS" அணியும் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். அதை தொடர்ந்து இரு அணிகளும் கண்டன போராட்டம் நடத்துவதில் பிசி ஆகி போயினர்.



வீரர்களை சேர்த்த பின், அடுத்த கட்ட நடவடிக்கையாக "cheer girls" தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பமாகிறது, மீண்டும் கூடுகிறது ஜெ கூட்டணி.

ஜெ: என்ன ஒ பன்னீர், அந்த "cheer girls" தேடற வேலை எப்படி போய்கிட்டு இருக்கு ?

ஒ பன்னீர்: அட போங்கம்மா, நா எவளோ கெஞ்சி கேட்டும் எனக்கு ஓனர் பதவி குடுக்கல்ல, அதுனால தான் இப்படி டென்ஷன் ஆ அலையறீங்க. இந்த வை.கோ "cheer girls" ஏ செலக்ட் பண்ணரதுக்குள்ள டோர்ணமேண்டே முடிஞ்சுடும்.

ஜெ: என்ன சொல்லறீங்க பன்னீர், நா சொன்ன நமிதா, மும்தாஜ், ஸ்ரேயா எல்லாரும் வந்துட்டாங்க தானே ?

ஒ பன்னீர்: கிழுந்து கிருஷ்ணகிரி, வை.கோ நீங்க சொன்ன யாரையும் செலக்ட் பண்ணல, அவரு கைல ஒரு இதிகாச புஸ்தகத்த வெச்சுகிட்டு, மணிமேகலை, கொபெருன்தேவி, யாழினி, மாதவி னு அவங்க அழகுல "cheer leaders" வேணுமாம் அவருக்கு.

ஜெ: வாட் non-sense இஸ் திஸ், கூப்புடு யா அந்த அர லூசா, பன்னீர் நீ கீழ்பாக்கதுக்கு ஒரு போன் போடு.

என்று ஜெ கூச்சலிடும் போதே, இதிகாச புத்தகங்களை தூக்கி போட்டுவிட்டு, நமிதா, மும்தாஜ், ஸ்ரேயா ஆகியோரை தேர்வு செய்கிறார் வை.கோ.

ஒ பன்னீர்: அம்மா, இந்த சிம்பு பயபுள்ள வேற ஒரு ரெண்டு நாளா டல்லா இருக்கான், என்ன னு கேட்டாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்கறான், நீங்க தான் கொஞ்சம் பேசி என்னா னு கேட்கணும்.

ஜெ: யோவ், எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல, நீயே பார்த்துக்கோ, ரொம்ப பேசினான் நா, கட்சி ஆபீஸ் ல போஸ்டர் ஓட்டற வேலை தான் செய்யணும் னு வார்ன் பண்ணி வெய்.

ஒ பன்னீர்: நா நினைக்கிறேன், அவன் அந்த பொண்ணு நெனப்பாவே இருக்கான் னு,

ஜெ: யாருய அந்த பொண்ணு, சொல்லு "cheer girls" காங் ல சேர்த்து விட்டுடுவோம்.

ஒ பன்னீர்: அதான் மா, இவன் கூட உதட்ட கடிச்சு ஊரையே பரபரப்பக்கினானே, அந்த பொன்னும், கட்டுனா இவனைத்தான் கட்டுவேன் னு, சேலையே கூட கட்டாம நின்னுச்சே, அது யாரு, ஹ்ம்ம் "நயன் மோங்கியா" வோ என்னமோ வருமே.

சசி: யோவ் பன்னீர் அது "நயன் தாரா" யா, "நயன் மோங்கியா" ஒரு ஆம்பள, உன்னேல்லாம் கிசு கிசு எழுதவிட்ட அவ்வளோதான் போலருக்கே.

ஒ பன்னீர்: ஆங்!! அதே பொண்ணு தான் மா, எனக்கென்னவோ அந்த பொண்ணு இவனுக்கு டாட்டா காட்டினதுலேர்ந்து, இவன் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி தான் திரியுறான்.

ஜெ: என்ன எழவோ, ஒழுங்கு மரியாதையா மேட்ச் வெளையாட சொல்லு, சொதப்பினா நம்ப ட்ரீட்மென்ட் எப்படி இருக்கும் னு சொல்லிட்ட ல ?

ஒ பன்னீர்: அதெல்லாம் எப்பவோ சொல்லிட்டேன் மா, அதுக்கு அப்புறம் தான் தம்பி கொஞ்சம் தெளிவானாப்ல.

சசி: நம்பளும் ஸ்ரீசாந்த் பண்ணினா மாதிரி எதாவது பரபரப்பு பண்ணனும் யா.

ஒ பன்னீர்: (மனசுக்குள்) ஆஹா, என்ன டா புயல் சைலேன்ட்டா இருக்கே னு பார்த்தேன், அது வேலைய ஆரம்பிச்சுடுச்சு போலருக்கே.

ஜெ: ஒ ஆமாம் சசி, நா கூட நெனச்சேன், நீயே சொல்லிட்ட, ஸ்ரீசாந்த் பண்ணினத விட இன்னும் பரபரப்பா இருக்கணும் நம்ப news, அதுக்கு ஒரு சூப்பர் ஐடியா குடேன்.

சசி: அக்கா, இந்த ஹர்பஜன் கொண்டையன் என்ன பண்ணினான், எதிர் அணில இருக்கற ஸ்ரீசாந்த் ஏ போட்டு சாத்து சாத்து னு சாத்தினான், அந்த புல்லையும் கண்ணத்துல கைய வெச்சுகிட்டு, கேமரா அவன் பக்கம் திரும்புற போது, ஒ னு அழுது ஆட்டைய போட்டுட்டான்.

ஒ பன்னீர்: நடுவுல பேசறதுக்கு மன்னிக்கணும், அக்ஷுவல்லி பார்த்தீங்கன்னா, ஸ்ரீசாந்த் ஹர்பஜன் அடிச்துகாகவே அழுவல

ஜெ: ஒ இஸ் இட் ?

ஒ பன்னீர்: ஆமாம்மா, அவன் அழுததுக்கு காரணமே, இந்த ப்ரீத்தி சிந்தா பொண்ணு தான், அது ஆ ஊ நா, பிரெட் லீய கட்டி புடிசுக்குது, யுவராஜ் ஏ கட்டி புடிசுக்குது, சங்கக்காரா வ கட்டி புடிசுக்குது, பாவம் ஸ்ரீசாந்தும் வயசு புள்ள தானே, அத கட்டி புடிக்கல னு அந்த புள்ளைக்கும் ஏக்கம் இருக்குமா இல்லையா, அதான் தாங்க முடியாம அழுதுருச்சு. பாவம் ஸ்ரீசாந்த் மாப்புக்கு, ஹர்பஜன ஊறுகாய் ஆக்கினது தான் காமெடியே.

சசி: நம்ப கொஞ்சம் வித்யாசமா பண்ணனும் ஜெயா,

ஜெ: நீ சொல்லுக்கா எப்படி பண்ணனும் னு அப்படியே பண்ணிடலாம்.

சசி: நீ என்ன பண்ணு, நம்ப டீம் player யாரையாவது போட்டு சாத்து சாத்து னு சாத்து. எதிராளிய அடிச்சதுகே அவ்வளோ பரபரப்பு நா, நம்ப டீம் ஆளையே போட்டு வாங்கினா எவ்வளவு பரபப்பு ஆகும் ?

ஜெ: ஆமாம்க்க, இது எனக்கு தோனவே இல்லையே, சரி அதுக்கு ஏத்த ஆள் யாரு சசி நம்ப டீம் ல.

ஒ பன்னீர் எங்கேயோ அவசரமாக வேலை இருப்பது போல் நழுவ, இதை தூரத்தில் இருந்து பார்த்த வை.கோ

வை.கோ: கட்சிக்காக எப்பொழுதும் எதையும் செய்ய, துளியும் தயங்காத நமது ஒ பன்னீர் இருக்கையில் நாம் வேறு யாரையாவது போட்டு துவைத்தால் அவர் மனம் எப்படி புண் படும், இந்த நிலையை தான் கூத்தபிரான் "கோபெருங்காவியத்தில்" அழகாக பாடுவார் ...

ஒ பன்னீர் வை.கோ பேசுவதை இடையில் தடுத்து

ஒ பன்னீர்: அடி தானே வாங்கணும், நானே வாங்கறேன், ஆனா இனிமே இந்த வை.கோ இலக்கண ரீதியா எதுவும் பேசக்கூடாது னு நீங்க சத்தியம் வாங்கிக்கணும்.

சசி: ஆமாம் ஜெயா வை.கோ சொல்லறதும் வாஸ்தவம் தான், ஒ பன்னீர் இருகரச்சே, நம்ப அவருக்கு தகுந்த மரியாதை குடுத்தாகனும், அதுனால நீ அவரையே போட்டு நாடு பிட்சுல சாத்து சாத்து னு சாத்திடு.

ஒ பன்னீர்: (மனசுக்குள்) அடேங்கப்பா, பெரிய பாரத ரத்னா அவார்டு குடுக்க போறீங்க, அதுக்கு என் சீனியாரிட்டி பார்த்து குடுக்கறீங்க பாருங்க, என்னம்மா தில்லாலங்கடி வேலை காட்றீங்க பா.

சசி: அடிவாங்கின கையோட, பன்னீர் நாடு பிட்சுலையே ஒ னு அழனும், அவர அடிச்சது கருணாநிதி தான் னு நம்ப டீம் மக்கள் எலாரும் அலறணும், அப்புறம் என்ன, அனுதாப அலை நம்ப பக்கம் வீசும், நெஜமாவே "MUMMY RETURNS" தான்.

ஜெ: சூப்பர் ஐடியக்கா

ஒ பன்னீரை அடிவாங்க வைத்த குஷியில், சிலப்பதிகாரத்தை, உரக்க படிக்கிறார் வை.கோ.

கோபாலபுரம் பேரும் பரபரப்பில் கொந்தளித்து கொண்டிருக்கிறது, "cheer girls" செலேக்கஷன் மும்முரமாக ஓடிகொண்டிருக்கிறது, தயாநிதி மாறன் ஏரியாவே அலறும் தேசிபெல்லில், "தீபிடிக்க தீபிடிக்க முத்தம் கொடுடா" சாங்கை போட்டு, ரசிகாவுடன் கேட்ட ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார், இதை கண்ட ஸ்டாலினும் அழகிரியும் காதில் புகை தள்ள, மாறனை நோக்கி ஓடி வருகிறார்கள்.

அழகிரி: டேய் முட்ட கண்ணா, என்னடா நடக்குது இங்க ?

த.மா: "cheer girls" செலேக்கஷன் போய்கிட்டு இருக்கு, பார்த்தா தெரியல ?

ஸ்டாலின்: ஹ்ம்ம் பார்த்தா "cheer girls" செலேக்கஷன் நடக்கரா மாதிரி தெரியல, ஏதோ "சின்ன வீடு" செலேக்கஷன் பண்ணறா மாதிரி இல்ல தெரியுது ?

த.மா: சேரி, இப்படி எல்லாம் பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க, அதுத்து குஷ்பூ, அசிநேல்லாம் வைடிங் டு டான்ஸ் வித் மீ.

அழகிரி: தம்பி நா அப்பவே சொல்லல, இந்த முட்ட கண்ணன் ஒத்து வர மாட்டான் னு, இப்ப கூட ஒண்ணும் கொறஞ்சு போய்டல, ஹ்ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லு, பையன தூக்கிடுவோம்.

இவர்கள் சண்டையை விலக்குவதே எனக்கு சரியாக உள்ளதே என்று அல்லுத்தபடி வருகிறார் கருணாநிதி, என் கழக செல்வங்களே, போட்டிக்கான நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கிறது என் கண்மணிகளே, உங்கள் வீரத்தை மைதானத்தில் காட்டுங்களட என் தங்கங்களே.

இப்படி அடிச்சு புடிச்சு ஒரு வழியா "பொறம்போக்கு ப்ரீமியர் லீக்" வெளயாட ரெண்டு டீமும் ரெடி ஆய்டுச்சு, எல்லாம் கூடி வர வேளை பார்த்து, BCCI ஒரு குண்ட தூக்கி போட்டுச்சு, அதாவது இந்த ரெண்டு டீமும் ஆடறதுக்கு மைதானம் குடுக்க மாட்டேன் னு சொல்லிடுச்சு, கண்ணகி சிலை தப்பித்ததை எண்ணி, வை.கோ சந்தோஷத்தில் கூத்தாடியதை ஜெ பார்த்தது வை.கோவிற்கு தெரியாது, அதே போல், தானும் அடி வாங்க தேவை இல்லை என்று தெரிந்த ஒ பன்னீர், வை.கோவின் முன் ஒரு குத்தாட்டத்தை அரங்கேற்றியிருந்தார், அதையும் ஜெ பார்த்து விட்டது நாம் அறிவோம்.

அனைத்து "cheer girls" க்கும் கண்ணீர் மருக விடை கொடுத்தார் த.மாறன், அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு சோடா பாட்டில், மாறனின் பின் தலையை பதம் பார்த்தது, பாட்டில் வந்த திசையை நோக்கினால், ஸ்டாலினும் அழகிரியும், புல் மப்பில் BCCI chief ஐ, காது கூசும் கேட்ட சொற்களால் திட்டிக்கொண்டு இருந்தனர்.

அடுத்த நாள் அம்மாவின் தோட்டத்தின் வாசலில் பெருங்கூட்டம், அதில் ஒரு தொண்டன் கூறினான்

தொண்டன்: அம்மா இந்த BCCI chief நம்ப விளையாடறதுக்கு ground தர மாட்டேன் னு சொல்லிட்டான் ல, நீங்க ஹ்ம்ம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க மா, அவன் மூஞ்சி மேல குத்து விட்டு அவன் வாய கோண வேச்சுடறேன்

ஒ பன்னீர்: டேய், அவர முன்ன பின்ன பார்த்துருந்தா, இப்படி பேசமாட்ட நீ, எல்லாரும் கலைஞ்சு போங்கப்பா.

ஒ பன்னீர் கூட்டத்தை கலைத்து கொண்டிருக்கும் போது, "இன்று பொய் நாளை வாராய்" என்று இராமாயணத்தின் ஒரு பகுதியை வை.கோ பாட, கொலை வெறியுடன் அவர துரத்துகிறார் ஒ பன்னீர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally