அன்புள்ள காதலிக்கு ...


வார்த்தைகள் அற்ற ஒரு மௌனமான மாலை வேளையில் மனதுக்குள் ஒரு இனிய போராட்டம், உங்கள் இருவரில் யார் அழகு என்று, பல முறை கடிதம் அனுப்பியும் திரும்பிப்பார்காத நீயா ? இல்லை, ஒவ்வொரு முறையும் அந்த கடிதத்தை கிழித்து போடும் உன் அப்பனா என்று. ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லை உன் அப்பனுக்கு, உன் போன்ற ஒரு சப்ப பிகரை பெத்ததற்கே அவனுக்கு இவ்வளவு ஏத்தம் கூடாது. காலா காலத்தில் நடக்க வேண்டியது நடக்காவிட்டால் இப்படித்தான், நான் கூறியது உன் கல்யாணத்தை பற்றி அல்ல, உன் அப்பனின் மரணத்தை பற்றி.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும், அதிகாலை நான்கு மணிக்கெலாம் அந்த பெருச்சாளி எழுந்து உன் வீட்டு அடுபாங்கரையில் பாத்திரங்களை போட்டு உருட்டுகிறதே, அது அப்படி அந்த வேளையில் செய்யும் வேலை தான் என்ன ? நான் ஒரு முறை உன் வீட்டுக்கு வந்த பொழுது அது கையால் ஒரு சொட்டு காப்பி வாங்கி குடித்து விட்டு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும், என் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், அந்த காபி, அவர் மண்டையில் என்ன இல்லையோ, அது போல இருந்தது. நமது குடியிருப்பில் "சமைத்து பார்" போட்டி வைத்த பொது, போட்டியின் பெயருக்கு ஏற்ப இருந்தது அவரது கை வண்ணம் "சமைத்து" பார்க்க மட்டும் தான் முடிந்தது, உண்ண முடியவில்லை. அப்படி ஒரு சமையலை உண்டும் நீ இவ்வளவு குண்டாக இருக்கிறாய் என்றால், உன் மன வலிமையை வியப்பதில் ஆச்சர்யம் இல்லை தான்.

அவர் போட்ட முதல் குட்டி தான் லூசு என்று நினைத்திருக்கும் வேளையில், உன் உடன் பிறந்த சகோதரனை கண்டதும், அந்த லூசுத்தன்மை உங்களது "ஜீனில்" இருப்பதை உணர முடிந்தது. எந்த மலையில் வைத்து உன் தந்தை அவன் வரவிற்கு நாள் குறித்தாரோ தெரியவில்லை, அவன் சற்றும் குரங்கிற்கு சளைத்தவன் இல்லை என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறான். போன வாரம் நமது தெரு முனையில் உள்ள டீ கடையில் புகுந்து அவன் செய்த கலாட்டாவில், அன்று மூடிய கடையை இன்று வரை திறக்கவே இல்லை அந்த நாயர். எப்படி திறப்பார், அவர் மேஜை மேல் வைத்திருந்த கடை சாவியை தான் உன் உடன் பிறந்த வானரம், பஜ்ஜியோடு சேர்ந்து கபளிகரம் செய்துவிட்டதே. பஜ்ஜிக்கும் சாவிக்கும் விதாசம் தெரியாத அவனை எந்த வகையில் சேர்ப்பது என்று உலக வனவிலங்கு துறை யோசித்து வருகிறது.

சரி உன்னை பற்றி பேசுவோம், பார்பதற்கு முட்டை கண்ணும், சோடா பாட்டில் கண்ணாடியும் அணிந்திருப்பதால், படிப்பில் சுட்டியாக இருப்பாயோ என்று எண்ணினேன், அது அதிகம் படித்ததால் போட்ட புட்டி அல்ல, அதிகம் சைட் அடித்ததால் போட்ட போட்டி என்று பின்னர் தெரிந்துகொண்டேன். கண்ணாடி முன் நின்றால் அது எப்படித்தான் உங்கள் மனம் கல்லாகிப்போகுமோ என்று எனக்கு தெரியவில்லை. போன வாரம் நீ ஆசை ஆசையாய் ஒரு சுரிதார் வாங்கினாய் என்று உன் அம்மா என் அம்மாவிடம் கூறினார், "சூமோ காருக்கு ஸ்கூட்டர் கவரா" என்று மனதுக்குள் அலறினாள் என் அம்மா. அதை நீ மறுநாள் நமது குடியிருப்பில் போட்டுக்கொண்டு அலைந்ததை பார்த்ததும், "மாவு மிஷினுக்கு துணி சுத்தியது போல் இருந்தது. ஒன்று உன் வீட்டு கண்ணாடியை மாற்று அல்லது உன் புட்டியை மாற்று, தவறிக்கூட மார்டன் உடைகளை உன் கையால் கூட தொட்டுவிடாதே.

உன் தங்கையை பற்றி கூறாவிட்டால் இந்த கட்டுரை எப்படி நிறைவடையும் ? அவளும் அந்த பெருச்சாளியின் சிலிமிஷத்தால் பிறந்தவள் தானே, அதே "டர்ட்டித்தனம்" அவளிடமும் இருக்கும் அல்லவா. என் தம்பி அவளிடம் லவ் லெட்டர் கொடுத்ததற்கு அவனை பார்த்து "ஸ்டுபிட்" என்று கூறியதாமே அந்த கோட்டான் ? அந்த லவ் லெட்டர் முதலில் அவளுக்கு இல்லை என்பதை அவள் காதுகளில் உரத்து கூற வேண்டும், உன் தங்கைக்கு அப்படி ஒரு கடிதத்தை என் தம்பி கொடுத்திருந்தால், அவனை இன்றே ஒரு நல்ல கண் மருத்துவனிடம் நான் கூட்டி செல்கிறேன். கோழி முட்டையை சற்றே பிதுக்கி விட்டது போல் ஒரு முகம், எருமை மாட்டிற்கும் பன்றிக்கும் பொதுவாக இருப்பது போல் ஒரு மூக்கு, அதில் சார்ட் பின் சொருகியது போல் ஒரு மூக்குத்தி. இந்தியாவின் நுழைவாயிலை போல் இரண்டு பற்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு, சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அவள் ஒரு மேக்கப் போடாத பேய்.

ஏய், நா எழுதின இந்த கட்டுரைய கொஞ்சம் படிச்சு பாரேன், நீ மொதல்ல என் லவ்வ ரிஜெக்ட் பண்ணின பாரு, அப்போ உன் குடும்பத்து மேல இருந்த கடுப்புல எழுதின கட்டுரை இது. இதை ஆசை மனைவி சரண்யாவிடம் அவன் படித்து காட்டிய பின், சுதாகரை ஏதோ ஒரு கண் மருத்துவமனையில் பார்த்ததாக தகவல்.

Comments

  1. Ha haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
    Supera irukku
    wonderful writeup!!
    Aana athu enna tea kadainna "nair kadai" thaana?? grrrrrrr :-)

    ReplyDelete
  2. அந்த காபி, அவர் மண்டையில் என்ன இல்லையோ, அது போல இருந்தது.

    :)

    ReplyDelete
  3. Hahahaha..couldn't stop laughing man...

    ReplyDelete
  4. Yaaru petha pullaingalo ippidi naaruthu kudumbam maanam :P

    ReplyDelete
  5. nalla vellai... Ammavai vittuteenga... pavam avangalayum bejaar panniduveengalo nu baienden....

    :-) ultra comedy annathe....

    ReplyDelete
  6. Anonymous7:49 PM

    mudiyala pa mudiyala... room podu yosipignalo...... bt konjam overa eruku sundakar ena periya manmathano........

    ReplyDelete
  7. @Folks - Thanks for your comments ..
    @Pavitra - Room ellaam podalanga, adhu thaanaa varudhu :)

    ReplyDelete
  8. hey..
    ungaluku innum oru follower :)
    my friends like your blog too!

    sema timing comedy.. chance ae illa :-)

    ReplyDelete
  9. @Aparna - Looks like I have appointed a PRO for my blog ;-))

    ReplyDelete
  10. superrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  11. urs is d first tamil blog im reading... lvd it! Sontha anubavamo?? :)

    ReplyDelete
  12. urs is d first tamil blog im reading... lvd it! Sontha anubavamo?? :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally