இப்படிக்கு ...
வெள்லேந்தியாய் பிறந்தோம் ...
சலனமிலாமல் வளர்ந்தோம் ...
கை கோர்த்து நடந்தோம் ...
மணல் வீடு கட்டி மகிழ்ந்தோம் ...
ஒரே பாயில் கண் மலர்ந்தோம் ...
திடீரென்று ஒரு நாள் பிரிந்தோம் ...
வயதுக்கு வந்து விட்ட ஒரே காரணத்தால் ...
பால்யத்து சிநேகம் தன்னை இழந்தோம் ...
- இப்படிக்கு வாழ்கை
எதையும் ஒரு முறைக்கு மேல் கேட்டு நச்சரித்த பாட்டியும் ...
கண் முன் இருந்த பேனாவை தேடித்தர கேட்ட தாத்தாவையும் ...
யார் வந்தாலும் பல முறை கேட்ட பின்னே கதவு திறக்கும் அம்மாவையும் ...
நாளேடை மூக்கு நுனி உரச வைத்து படிக்கும் அப்பாவையும் ...
பார்த்த பொது எரிச்சல் தான் வந்தது எனக்கு ... அப்போது உறைக்காதது ...
"கெழட்டு முண்டமே" என்று என் பேரன் என்ன அழைத்தபோது உறைத்தது ...
முதுமையின் வலி ....
- இப்படிக்கு முதுமை
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணியாகிவிட்டது ...
வானத்தில் உள்ள நக்ஷத்திரங்களை ஒருங்கினைத்தாகிவிட்டது ...
நாளை மறுநாள் வரப்போகும் வீட்டுப்பாடங்களை செய்தாகிவிட்டது ...
தெரு முனையில் கடைசி பஸ் எப்பொழுது வரும் என்று கேட்டாகிவிட்டது ...
பாட்டியின் நூல் புடவையில் உள்ள பிசுறுகளை நீக்கியாகிவிட்டது ...
விரகில்லா அடுப்பின் சாம்பல் பொடிகளையும் ஊதியாகிவிட்டது ...
இவைஅனைத்தும் செய்தால் பசி போகும் என்று அம்மா சொன்னது பொய்யா ?
இன்னும் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கூறாமல் தூங்கிவிட்டாயே அம்மா ...
- இப்படிக்கு பசி
கேட்ட பொழுதில் மண்ணெண்ணெய் ...
அள்ள அள்ள குறையாத அளவிற்கு சக்கரை ...
போதும் என்று சொல்லும் அளவிற்கு அரிசி ...
இனியும் வேண்டாம் என்று கூறும் அளவிற்கு பயறு வகைகள் ...
கேட்காமலே பையில் திணிக்கப்படும் கொசுறு சாமான்கள் ...
இவை தான் நான்கு நாள் உணவில்லாமல் தவித்த
குப்பை பொறுக்கும் முருகனின் ரேஷன் அட்டை விவரங்கள்
- இப்படிக்கு அரசாங்கம்

Yu are good in tamil mate....first 3 were superb...
ReplyDeleteToo good!!
ReplyDeleteI loved the 3rd one a lot!!
Ah.... sonnenle ur detailing in tamil is great...
ReplyDeletechildishness vs. second childishness
hunger vs. govt
Ouch... too good mate... kalakrel, uncle :-P
First & Second : I could guess what it was about. 3rd & 4th kept guessing until the sugnature. Good ones
ReplyDelete