அரக்கர்கள் ... அமைச்சர்கள் ...
பசி மயக்கம் தாக்கிய போதும், பணி செய்ய சென்றான் ...
கண்மூடி துயிலிருந்த மகளின் கரம் பற்றி கொண்டான் ...
போகாதே என்பது போல் பார்த்த மனை தன்னை அணைத்தான் ....
இரவு நேர படம் பார்க்க கட்டாயம் செல்வோம் என்றுரைத்தான் ...
அவள் கண்ணில் தெறித்த துளி துடைத்து, முத்தம் ஒன்றை பதித்தான் ...
நேரத்தில் போய் சேரவேண்டும்மென்று வாகனத்தை மிதித்தான் ...
பயணத்தின் போதும் அன்பு மகளின் ஸ்பரிசத்தை நினைத்தான் ...
மாலை நேரம் வருவதற்கு ஏங்கி ஏங்கி தவித்தான் ...
அமைச்சர்களின் பாதுகாப்பிற்கு ஓடி ஓடி உழைத்தான் ...
வந்தவர்களின் உடைமைகளை சோதித்து முடித்தான் ...
நேற்றிவழி கடைபுரண்ட வியர்வைதனை துடைத்தான் ...
மனைவி தந்த தயிர் சோற்றை பசிதீர சுவைதான் ...
மணி பர்சில் சிரிக்கின்ற மகளின் முகம் பார்த்து சிரித்தான் ...
உடம்பில் புதுத்தெம்பு புகுந்ததை உணர்ந்தான் ....
அமைச்சர்களின் வருகைக்கு கால்கடுக்க நடந்தான் ...
அவர்களுடன் பேச இருந்த உரைநடையை பயின்றான் ...
கசங்கிவிட்ட காக்கியினை சரிசெய்து நிமிர்ந்தான் ...
வந்துவிட்ட அமைச்சர்களின் முகம் பார்த்து மலர்ந்தான் ...
வெறிகொண்டு ஓடிவந்த ஆட்களை பார்த்து அதிர்ந்தான் ...
கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டுகள் பல சுமந்தான் ...
ஒரு நிமிடம் ஆவதற்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்தான் ...
இரு கை கூப்பி அமைச்சர்களை அழைத்தான் ...
தன் உயிரை காக்குமாறு சொருகிய விழிகளால் உரைத்தான் ...
உதவிகள் ஏதும் வாராமல் துடிதுடித்து மடிந்தான் ...
நாடி துடித்து அடங்கிய வேளையில் சிணுங்கியது அவன் அலைபேசி ...
"Ammu Calling ..."
மனிதாபிமானம், இறக்கம், ஏதும் இல்லாத அந்த அரக்கர்களை அமைச்சர்களாகிய அனைத்து தமிழ் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இது போல் மேலும் பல கொடூரமான வீடியோ காட்சிகளை கண்டுகளிக்க தயாராக இருப்போம் தமிழர்களே. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நிலாடா என்பது பழைய சொல்வடை ... தமிழன் என்று சொல்லடா ... துடி துடித்து சாவடா என்பது புதிய சொல்வடை ... அந்த காவல்காரனுக்கு நடந்த அவலம் உங்களுக்கோ, எனக்கோ நடப்பதற்கு நாட்கள் பல ஆகாது. கடவுள் என்ற ஒருவன் இல்லை தான் போலும் என்று நம்மை எண்ண வைக்கும் மற்றுமொரு சம்பவம்.
Watta post mate!! Read this and couldn't stop a lump in my throat. Such pain to even have seen what we've all seen. Do we have Law n Order?? If a policeman on ministerial security convoy can be butchered like this, we people stand no chance......giving 5L n govt job is like putting rice in the mouth of the dead person failing to save him.
ReplyDeleteMay his poor soul rest in peace.
Actually i saw the news first in the paper, and i didnt have the heart to watch the video. My heart goes to the family.
ReplyDeleteUngalukku kovam vanthaathaan post poduveengala...
Romba, romba nyayamana kovam!
ReplyDeleteIt was such a heart wrenching moment watching someone, pleading for help.
What angers me is that the ministers had a convoy...cars & drivers all provided by Govt (tax payers's money)....Why did no one try to transpost the injured cop in a car, to a nearby hostipal.... There were other cops around too....Why the hell they were waiting for an ambulance?