பயணம்
அந்த எதிர்க்காற்றின் குளிர்ச்சியை தாங்க முடியாமல் ஜன்னலை மூடிவிட்டு அம்மா கொடுத்து அனுப்பிய மப்ளரை தலையில் சுற்றிக்கொண்டான் ரமேஷ், அவனின் அன்றாட வாழ்க்கையின் சராசரி பயணம் அது. தேனீ தான் அவனது சொந்த ஊர், அம்மா தேனியில் தனி வீட்டில் இருக்கிறாள், வாழ்கை இழுத்த இழுப்பில் மிகவும் நடுங்கியும், ஒடுங்கியும் போனவள், கணவனின் மறைவுக்கு பின் நான்கு சுவருக்குள் அடைந்து கொண்டவள். அவன் கண் முன்னே அவனது தந்தை வெட்டி கொல்லப்பட்டது இன்னும் அவன் மனத்திரையில் பசுமையாக ஓடிக்கொண்டே இருக்கிறது. இவனது பால்ய பருவம் சினிமாவில் வருவது போலவே மிகவும் செழிப்பானது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவனது தந்தையின் இடம் தான் அந்த ஊரில், அவனது கிராமத்தில் கணிப்பொறி வாங்கிய முதல் ஆளும் அவனே, பணத்திற்கு என்றும் குறைவு இருந்ததே இல்லை, அவனின் தந்தை செய்யும் தொழில் என்னவென்று அவனுக்கு ஒருநாளும் புரிந்ததில்லை, அந்த வயதில் அவன் புரிந்து கொள்ளவும் ஆசை படவில்லை. மனிதன் நாளையை பற்றி கவலை படாத ஒரே பருவம் அவனின் குழந்தை பருவம் தானே. அவனின் வீடு எப்பொழுதும் மக்கள் கூட்டம் திளைக்கும் ஒரு இடமாகவே இருந்தது, அனைவருக்கும் விருந்தோம்பல...