காக்கா - வடை - பாட்டி - நரி
A special 100th post ...
எலாருக்கும் இந்த பாட்டி - காக்கா - வடை - நரி கதை தெரிஞ்சு இருக்கும், இருக்கணும். இதே கதைய நா SOFTWARE INDUSTRY க்கு பொருந்தரா மாதிரி மாத்தி எழுதிருகேன், எப்படி இருந்துச்சு னு படிச்சு பார்த்துட்டு "Shout at me"
ஒரு ஊருல ஒரு company (அதான் பாட்டி) internet ல code (அதான் வடை) சுட்டு வித்துகிட்டு இருந்தாங்களாம், அப்போ அந்த வழியா போன ஒரு programmer (அதான் காக்கா), code நல்லா சுடராங்களே இந்த கம்பெனி னு, தான் அந்த code எ எப்படியாவது சுட்டுடனும் னு நெனச்சுசாம், இப்படியாவது code சுட்டு குடுத்தா தானும் project manager (அதான் நரி) கிட்ட நல்ல பேரு வாங்கிடலாம் னு காக்கா நெனச்சுசாம்.
அப்போ னு பார்த்து அந்த code சுடர company ல lunch brake னு சொல்லிட்டு, அந்த code சுடர பையன் சாப்பட போய்டானாம், இது தான் டா நல்ல சமயம் னு சொல்லிட்டு அந்த programmer காக்கா அது கிட்ட இருந்த pen drive ல அந்த code எல்லாம் copy பண்ணி எடுதுகிச்சாம், code கிடைச்ச சந்தோஷத்துல அந்த programmer காக்கா அதோட மூக்குல அந்த pen drive எ வெச்சுகிட்டு அதோட company கு பறந்து போச்சாம்.
அங்க அந்த வழியா வந்த வேற ஒரு project மேனேஜர் நரி இந்த காக்கா மூக்குல இருந்த pen drive எ பார்த்துட்டு, ஹே காக்கா காக்கா உனக்கு ரொம்ப சளி யா இருக்கே, மூக்கெலாம் ஒழுகுதே, நீ ஏன் ஒரு வாட்டி மூக்கு சிந்த கூடாது னு கேட்டுச்சாம், அத உண்மை னு நம்பின programmer காக்காவும், ஆமாம் அதுவும் சரி தான் னு சொல்லிட்டு, பக்கத்துல இருந்த tissue paper ல "சர்ர்ர் சர்ர்ர்ர்" னு மூக்க சிந்திச்சாம், அப்போ னு பார்த்து, அது மூக்குல இருந்த pen drive கீழ விழுந்துடுச்சாம், உடனே அந்த project manager நரி, அந்த pen drive ல இருந்த code எல்லாம் தான் எழுதின code னு பொய் சொல்லி அதோட project manager (வேற ஒரு நரி) கிட்ட கொண்டு போய் காமிச்சு நல்ல பேரு வாங்கிடுச்சாம்.
பாவம் தான் சுட்ட code எ இப்படி அநியாயமா தவற விட்டுடோமே னு அந்த programmer காக்கா ரொம்ப வருத்த பட்டுச்சாம், திரும்பவும் வேற ஒரு code சுட்டு குடுக்காட்டி, appraisal ல அந்த project manager நரி ஆப்பு அடிச்சுடும் னு கவலை பட்டுச்சாம்.
இப்படி தான் மக்களே, நம்பள மாதிரி காக்கா எல்லாம், கஷ்ட பட்டு, வேதனை பட்டு, போராடி ஒரு code சுட்டு, அத ஒரு module ல போட்டு நல்ல பேரு வாங்கலாம் னு நினைப்போம், அப்படி போராடி சுட்ட code எ, தான் தான் மண்டைய ஒடைச்சு, ராப்பகலா எழுதினா மாதிரி நிறைய project manager நரிங்க நம்ப பொழப்புல மண்ண போடுதுங்க, அந்த மாதிரி நரிங்களுக்கு ஒரு படமா இருக்கட்டும் னு தான் இந்த கதைய எழுதினேன்.
Code சுடறது எவளோ கஷ்டம் னு programmer காக்காங்களுக்கு மட்டும் தான் தெரியும், இப்படி வெயில் லையும் மழை லையும் code தேடி அலைஞ்சே என்ன மாதிரி கருப்பா போன காக்காஸ் 1000, 1000 இருக்கு ...
By
ஒன் மோர் டார்க் காக்கா ஆப் திஸ் சாப்ட்வேர் industy
Comments
Post a Comment