ஒரு நிமிட கதை ...

அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தான் சேகர், என்னங்க சாயங்காலம் வீட்டுக்கு வரச்சே மறக்காம 2 கிலோ புளி, 1 கிலோ சக்கரை, 1 கிலோ து.பருப்பு வாங்கிட்டு வாங்க என்று அவன் மனைவி பார்வதி அலறியது அவன் காதுகளை எட்டவில்லை என்ற உண்மையை பார்வதி உணரவில்லை.  

எப்பொழுதும் பரபரப்பாக நகரும் நகர வாழ்கை இன்று ஏனோ ஒரு வித அமைதியோடு நகருவதாக தோன்றியது சேகருக்கு, சதா சர்வ நேரமும் வாய் ஓயாமல் அரட்டை அடிக்கும் அவனது பக்கத்து சீட்டு மாலாவும் இன்று அதிகமாக பேசவில்லை, எப்பொழுதும் மதிய உணவு அருந்த தன்னை தவறாமல் அழைக்கும் சிவராமன் இன்று ஏனோ அழைக்காமல் போனது சற்று வருத்தத்தை தந்தது, சரி அவருக்கு என்ன கோபமோ என்று அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

மாலை வீடு திரும்பிய சேகருக்கு அவன் பிள்ளைகளும் எந்த ரகளையும் செய்யாமல் வீடு நிசப்த்தமாக இருந்தது மேலும் மனதிற்கு நிம்மதியை அளித்தது. வாழ்கை எப்பவுமே இப்படி அமைதியா போனா எவ்வளவு நல்லா இருக்கும் என்று அவன் மனதிற்குள் எண்ணி முடிப்பதற்குள், அவன் காலையில் மறதியாய் விட்டு சென்ற அவனுடைய "ஹியரிங் எய்ட்" அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது.

Comments

  1. idu yenna maradi mannanin kadhaiyaa lllai ungalin amaidiyaana chennai vaazhkayin ariguriya?

    ReplyDelete
  2. Thank you for the light moments...Keep your good work

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally