நா வந்துட்டேன் ...

அட டா, நா கொஞ்ச நாள் ப்ளாக் எழுதாட்டி நாட்டுல எவ்வளவு பிரெச்சனை ? விலைவாசி ஏறி போச்சு, கனி பொண்ணு ரிலீஸ் ஆகி போச்சு, விஜய் படம் ஓடி போச்சு, ஜெயலலிதா பெங்களூர் போச்சு, டெண்டுல்கர் செஞ்சுரி போச்சு, அண்ணா ஹசாரே பேச்சு போச்சு, லோக் பால் பில் நாசமா போச்சு, தேவ் ஆனந்த மூச்சு போச்சு, கபில் சிபல் லூசா போச்சு, கொல்கத்தா ல கள்ள சரக்கு அடிச்சு 200 பேர் செத்து போச்சு. சரி நா ரெகுலரா ப்ளாக் எழுதினா இதுல ஏதாவது மாற போகுதா? இல்லையே, எப்போ நம்ப இந்த தேசத்த சிங்கு கிட்ட குடுத்தொமோ அப்பவே சங்கு ஊத ஆரம்பிச்சாச்சு.

எனிவேஸ், ஐ ஆம் சாரி பார் திஸ் லாங் ஆப்சென்ஸ், கல்யாணம் ஆனா பேச்சு சுதந்திரம் போகும் நு தெரியும், எனக்கு இன்னுமே அட்வான்ஸ்டா எழுத்து சுதந்திரமும் போச்சு நு நினைக்கறேன். ஒரு தலை சிறந்த குடும்ப தலைவனா மாறிக்கிட்டு வரேன், ஆபீஸ் - வீடு - ஆபீஸ் இது தான் என்னோட ரோடீனா இருக்கு இப்போ, அதுக்கு நு நா என்னமோ ஆபீஸ் ல மலைய சாயக்கறதா யாரும் தப்ப நெனைக்க கூடாது, அங்க அளவான, பட் அருமையான வேலை எனக்கு, ரொம்பவே மனசுக்கு புடிச்சு வேலை பண்ணறேன், "மயக்கம் என்ன" படத்துல வர  தனுஷ் (கார்த்திக்) மாதிரி, ஆனா என்ன, பக்கத்துல தான் ரிச்சா கங்கோபாத்யாய் கு பதிலா ஒரு  "குண்டா வீங்கின பாதியாய்" ஒரு பிகர் இருக்கு (என் பொண்டாட்டி தான்), கண்டிப்பா இத படிச்சுட்டு அவ பேயாட்டம் போடுவா, ஆனா நான் தான் சரக்கடிச்சுட்டு இத எழுதறேன் ல, எனக்கு என்ன பயம்.

முன்னெலாம் எத வேணும்னாலும் தைரியமா எழுதலாம், இப்போ அப்படி இல்லையே, "எல்லாத்தையும் நா படிக்கணும்" நு ஒரு லூசு சொல்லுதே, இப்படியே போச்சு நா "ஏழாம் அறிவு" ல வர வில்லன் (ஆக்சுவலி ஹி வாஸ் க்யூட்) "டாங்-லீ" மாதிரி, கண்ணாலேயே "கபில் சிபல்" எல்லாரையும் கண்ட்ரோல் பண்ணினாலும் பண்ணுவாரு, சப்போஸ் நீங்க "கபில் சிபல் ஒரு லூசு" நு டுவீட் பண்ணனும் நு நினைச்சா, உங்க லாப்டாப் கேமரா வழியா கபில் சிபல் உங்கள பாப்பாரு உடனே நீங்க "சோனியா ஜி ஈ தேஷ் கா மாதேவி ஹே. மன்மோகன் சிங், ஈ தேஷ் கா பிதா ஹே, முஜே ஏக் குத்தா ஹே" நு டுவீட் பண்ணிடுவீங்க, என்ன கேட்கவே பயமா இருக்கா? அட பயப்படாதீங்க பாசு, என்ன மாதிரி கேமரா இல்லாத லாப்டாப் வழியா டுவீட் பண்ணுங்க ;-).

எனக்கு நெஜமாவே ஒன்னு புரியல, இந்த அண்ணா ஹஜாரே இப்போ தான் லூசா? ஆர் எப்பவுமே லூசா? என்ன மாதிரி லோக் பால் பில் சரியா புரியாதவங்களுக்கு புரியறா மாதிரி சொல்லணும் நா, அண்ணா ஹசாரே என்ன சொல்லறார் தெரியுமா, நா குடுக்கற ஜெட்டிய தான் எல்லா அரசியல் வாதியும் போடணும், அதுல பெரிய ஓட்டை இருக்கு, அதா யாரும் மறைக்க கூடாது. அரசியல் வாதிங்க எல்லாரும் என்ன கேட்கறாங்க நா, ஜெட்டி போடறதே மறைக்க தானே அதா எப்படி மாத்தறது. இவளோ தான் விஷயம், இது தான் பிரெச்சனை. அண்ணா ஹசாரே ஒரு ஒரு வாட்டியும் வேற வேற கலர் ல ஜெட்டி தயார் பண்ணி காட்றாரு, அதா நம்ப அரசியல் வாதிங்க வாங்கி பார்த்து, இதுல ஓட்ட பெரிசா இருக்கு, இதுல தையல் பிரிஞ்சுருக்கு நு திருப்பி திருப்பி அனுப்பறாங்க. இதுக்கு நடுவுல, பிரதமர் ஜெட்டி போடணுமா வேண்டாமா நு ஒரு பிரச்சனையும் முளைச்சுருக்கு. இவங்க தகராறு ல நம்ப ஜெட்டிய உருவாத வரைக்கும் ஓகே. ஜெய் ஹிந்த்.

இந்த கேரளா காரங்களுக்கு என்ன வேணுமாம்? அணையோட ஒசரத்த ஏத்தவும் மாட்டாங்களாம், வேற ஒரு அணையும் இப்போ கட்ட மாட்டாங்களாம், ஆனா மாசத்துக்கு நாலு படம் ஷகீலவையும், சங்கவியும் வெச்சு எடுப்பாங்களாம். நேந்தரங்கா சிப்ஸ் போடறதுல இருக்கற அறிவு, நேர்மையா யோசிக்கறது ல இல்லையே. அணையோட ஒசரத்த ஏத்தினா அணை ஓடைஞ்சுடும் நு சொல்லறங்களே, நாளைக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினா, அப்போ கூட தான் அணை உடைய வாய்ப்பு இருக்கு, வலு இல்லாத அணை என்னிக்கு வேணும்னாலும் உடையலாமே? நா நினைக்கறேன் இந்த பசங்க எல்லாரும் சின்ன வயசுலேர்ந்தே பலான படம் பார்த்தே வளர்ந்தவங்க, அதுல அடிக்கடி லுங்கிய தூக்குவாங்க இல்ல, அது மாதிரியே, எந்த பிரெச்சனை வந்தாலும் லுங்கிய தூக்கறது. தம்பிங்களா, இது ஒரு தேசம், இதுல நீயும் ஒன்னு தான், நானும் ஒன்னு தான், புரிஞ்சு நடந்துக்க. உங்க ஊரு ல ஒரு ஸ்ரீசாந்த் தான் இருக்கான் நு நினைச்சேன், இப்படி ஊரே ஸ்ரீசாந்தா இருப்பீங்க நு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல.

"கெடக்கறது எல்லாம் கெடக்கட்டும் கிழவிய தூக்கி மனை ல வெய்" நு ஒரு வாசகம் சொல்லுவாங்க, அந்த கதையா இல்ல இருக்கு இந்த ஜெயலலிதா பண்ணற கூத்து. அட அந்த குருட்டு கெழவன் ஆட்சி ல, அரசு கஜானா வ தான் சொரன்டினான், இந்த அம்மா என்னடா நா, என் கஜானால இல்ல கைய வெக்குது. மின் கட்டணம் ஏத்திடுச்சு, பஸ் டிக்கெட் ஏத்திடுச்சு, கொய்யாலே இப்போ செத்தா கூட பால் விட முடியாதபடி பால் விலைய எத்திடுச்சு. ஏன் இந்த தம்மு, சாராயம், விஸ்கி, பிராண்டி இதெல்லாம் விலை ஏத்தேன்? ஏன் பச்ச புள்ளைலேர்ந்து நிறைச்ச கெழம் வரைக்கும் குடிக்கற பால் விலைய எத்தற? இது ஒரு பக்கம் கூத்து நா, ஊர் ல இருக்கற எல்லா கட்டிடத்தையும் ஆஸ்பத்திரியா மாத்திகிட்டு இருக்கு. எனக்கு புரிஞ்சு போச்சு, இப்படி விலை ஏத்தி விலை ஏத்தி நமக்கெல்லாம் சூடேறி மண்டை வெடிக்கும் இல்ல, அப்போ தூக்கிட்டு போக தான் இந்த வசதி எல்லாம் பண்ணறாங்க.

ஊரே இங்க கொந்தளிச்சுகிட்டு இருக்கரப்போ, மவனே ஐஸ்வர்யா ராயோட பிரசவத்த கவர் பண்ணினாங்க பாருங்க இந்து நியூஸ் சானெல் நாயிங்க, அவங்கள மன்னிக்கவே மாட்டேன். டேய் இந்த நாட்டுல இவ தான் முதல் முறையா புள்ள பெத்துக்கராளா, இல்ல நீங்க இது வரைக்கும் புள்ள பெத்ததா கேள்வி பட்டதே இல்லையா? அவள விட ரொம்ப அழகான பொண்ணுங்க டெய்லி நம்ப நாட்டுல குழந்தை பெத்துக்கராங்கடா, அவ ஒண்டி தான் பொண்ணும் இல்ல, அவ ஒண்டி தான் அழகியும் இல்ல. பணம் குடுத்தா நீங்க என் பொண்டாட்டி பிரசவத்த கூட கவர் பண்ணுவீங்க நு எனக்கும் தெரியும். உங்கள எல்லாம் "வேலாயுதம் + திருப்பாச்சி + கில்லி" மூணு படத்தையும் மாத்தி மாத்தி ஒரு வாரம் பார்க்க வெக்கணும் டா, அப்போ தான் வலி நா என்ன நு தெரியும், ராஸ்கல்ஸ்.

சரி வழக்கம் போல எல்லாரையும் தூத்தியாச்சு, இப்போ மணி பண்ணெண்டு ஆச்சு, என் பொண்டாட்டி இன்னிக்கு தான் ஊருக்கு போச்சு, நா இத போஸ்ட் பண்ணிட்டு தூங்க போச்சு. அடுத்த வருஷத்துல கண்டிப்பா நிறைய போஸ்ட்ஸ் எழுதுவேன் நு ஒரு கற்பனையான நம்பிக்கையோட, படிச்ச / சிரிச்ச உங்க எல்லாருக்கும் ஒரு வணக்கத்த போட்டு, உங்களிடம் இருந்து விடை பெறுவது, உங்கள் ..... டுபுக்கு இயர் பையன்.

Comments

  1. இன்ன சாமி, ரொம்ப நாளா கண்ணுலே காணமேன்னு நினைச்சேனா, டபால்னு உங்க போஸ்டு வந்துடுச்சு, சரி ஏதோ சமாச்சாரம்னு கம்னு இருந்துட்டேன்,இப்பங்காட்டி வெசயம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. வருஷம் முடியறதுக்குள்ளே ஒரு போஸ்டு பண்ணிடுவோம்னு எழுதீனங்கலாக்கும். பரவாயில்லை, உங்க ஆப்சன்ச்லே ஒரு பிரீப் சம்மரிக் கொடுத்துட்டீங்க .
    நல்லாவே இருந்தது, இப்ப இருக்கறவங்க ஆட்சியை விட !
    வழக்கம் போலே ஏதாவது கிறுக்கு சாமி.

    ReplyDelete
  2. Highlight idhu dhan...

    இதுக்கு நடுவுல, பிரதமர் ஜெட்டி போடணுமா வேண்டாமா நு ஒரு பிரச்சனையும் முளைச்சுருக்கு.

    உங்க ஊரு ல ஒரு ஸ்ரீசாந்த் தான் இருக்கான் நு நினைச்சேன், இப்படி ஊரே ஸ்ரீசாந்தா இருப்பீங்க நு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல.

    Rendavadhu para konjam over...poor V...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally